போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தலைமை செயலாளர் இறையன்பு 300க்கும் மேற்பட்ட புத்தகம் வழங்கினார்: தேர்வர்கள் படிக்க மணிமண்டப நூலகங்களில் வைக்கப்படுகிறது

சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு, சென்ற மாதம் சென்னையில் செய்தித் துறை கட்டுப்பாட்டின் கீழ் மணிமண்டபங்கள் மற்றும் நூலகங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவு சார்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்த நூலகங்களில் போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலைமை செயலாளர் இறையன்பு, தனக்கு வழங்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் ஆகியோர்களிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.

Related posts

நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது: டெல்லி அமைச்சர் கோபால்ராய் மகிழ்ச்சி

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!!