கோவை கார் வெடிப்பு வழக்கு கைதான 2 பேரிடம் என்ஐஏ விசாரணை

கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரன் கோயில் முன் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் உக்கடம் கோட்டை மேடு பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (27) என்பவர் உடல் சிதறி இறந்தார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 14வது குற்றவாளியாக போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் (27) என்பவர் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கைதான உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ் (25) என்பவருடன் ஜமேஷா முபீன் சமூக விரோத ெசயல்கள் தொடர்பாக அடிக்கடி பேசி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து, இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இவர்களது வீடுகள் மற்றும் சில இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்