கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!!

கோவை: செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரைஸ்மில் நடத்திவந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

ராமச்சந்திரன் – விசித்ரா தம்பதி கோவை செல்வபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கனடாவில் மேற்படிப்பு படித்து வந்த மூத்த மகள் 15 நாட்களுக்கு முன்பு தான் கோவை வந்ததாகவும் கூறப்படுகிறது. ராமச்சந்திரன் – விசித்ரா தம்பதியினர் செல்வபுரம் ரைஸ்மில் வைத்து நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் புதிதாக பெரியளவில் வீடு கட்டி வந்த நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததன் காரணமாக 4 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தக்கவலறிந்து சம்பவ இடதிக்ரு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பவுடர் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருளை சாப்பிட்டு தற்கொலை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. பிரேதபரிசோதனைக்கு பிறகு இறந்தவர்கள் எவ்வித விஷத்தை பயன்படுத்தினர் என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

Related posts

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் அதுவே தமிழ்நாட்டுக்கு பொற்காலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன் : அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!!