தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம்

தேவையானவை:

கெட்டியான தேங்காய்ப்பால் – 4 கப்,
மில்க்மெய்ட் – 1 கப்,
ஓரம் வெட்டிய பிரட் துண்டுகள் – 6,
மலாய் – ½ கப்,
வெனிலா எசென்ஸ் – 3 சொட்டு,
பாதாம், பிஸ்தா – தேவைக்கேற்ப,
பால் – 1 கப்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் பிரட் துண்டுகளை நனைத்து, மிக்ஸியில் அரைக்கவும். பாலைச் சூடாக்கி அதனுடன் மில்க்மெய்ட், மலாய், பாதாம், பிஸ்தா சேர்த்துக் கலக்கி தேங்காய்ப்பால் பிரட் துண்டுகளுடன் (அரைத்து) கலக்கி ஃபிரிட்ஜில் வைக்கவும். மிகச்சுவையான சுலபமான ஐஸ்கிரீம் தயார்.

Related posts

ஜவ்வரிசி கொழுக்கட்டை

இறால் டிக்கா மசாலா

சோள ரவை உப்புமா