யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் சபலென்கா – கோகோ மோதல்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் அமெரிக்க நட்சத்திரம் கோகோ காஃப் இன்று மோதுகிறார். அரையிறுதியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் (27 வயது, 10வது ரேங்க்) மோதிய கோகோ காஃப் (19 வயது, 6வது ரேங்க்) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (28 வயது, 17வது ரேங்க்) உடன் மோதிய சபலென்கா (25 வயது, 2வது ரேங்க்) 0-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய சபலென்கா 0-6, 7-6 (7-1), 7-6 (10-5) என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 32 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் கோகோ காஃப் – அரினா சபலென்கா இன்று மோதுகின்றனர்.

Related posts

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்