சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்

பூந்தமல்லி: வேறு பெண்ணுடன் தொடர்பை கண்டித்ததால், வீட்டில் இருந்து 2 மகன்கள் மற்றும் தன்னை துரத்தி விட்டதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது அவரது மனைவி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மனைவி சாந்தி (60) அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் ஜாக்குவார் தங்கம், மகன்கள் கிருஷ்ணன், ஜெய் ஆகியோருடன் எம்ஜிஆர்.நகர் அன்னல் காந்தி தெருவில் வசித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் முதல் 23 வயது இளம்பெண்ணை என் கணவர் தினமும் வீட்டிற்கு அழைத்து வந்து இரவு நேரங்களில் தங்க வைத்து அனுப்புகிறார். கடந்த 15ம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்தபோது, நானும் எனது 2 மகன்களும் அவரை கண்டித்தோம். இதனால் எங்களை வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டார். எனவே, எனது கணவர் மற்றும் கள்ளத்தொடர்பில் உள்ள பெண்ணை அழைத்து கண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு