தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்

சென்னை: விஜிலா சத்யானந்த் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவர் திமுகவில் இணைந்த பிறகு தற்போது தமிழக அரசு அவருக்கு புதிய பொறுப்பு கொடுத்துள்ளது. அதன்படி, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இத்தகைய சூழலில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விஜிலா சத்யானந்த் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்