38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. 850வது கோலை பதிவு செய்து கால்பந்து வரலாற்றில் சாதனை!!

சவூதி : போர்ச்சுகலை சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 850வது கோலை விளாசி கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். கால்பந்து உலகில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியா அணியான அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது வருகையாலேயே அந்த அணி சர்வதேச அளவில் பெரிய புகழை எட்டி வீறுநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் சவூதி ப்ரோ லீக்கில் அல் அசம் அணிக்கு எதிராக களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாசர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இதில் ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் அவருக்கு 850வது கோலாக அமைந்தது. 38 வயதாகும் ரொனால்டோ 850வது கோலை விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கால்பந்து விளையாற்றில் இந்த சிறப்பை பெற்ற முதலாவது வீரரும் இவரே. இந்த சிறப்பை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் ரொனால்டோ,கால்பந்து வாழ்க்கையில் 850 கோல்கள்..இன்னும் எண்ணிக்கை தொடர்கிறது என்று வியப்பு கூறியுள்ளார்.

Related posts

சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!

பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்