சித்ரா பௌர்ணமியையொட்டி தி.மலை, சதுரகிரி மலைக்கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 25ம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில் திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி மலைக்கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி காலை 7 மணி முதலே மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்கவும் வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Related posts

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல்

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்