சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்: தங்கச்சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஜெயந்திநாதர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஒன்று சித்திரை வசந்த திருவிழா.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழா மே 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களோடு சுவாமி ஜெயந்திநாதர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன்படி இன்று தங்கசப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தை 11 முறை வளம் வந்தார் பின்னர் அம்பாளுடன் சுவாமியும் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல்

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு