சீனாவில் நடைபெற்று வந்த விளையாட்டு போட்டி கோலாகலமாக நிறைவு; ஆட்டம், பாட்டம் என களைகட்டிய கண்கவர் நிகழ்ச்சிகள்..!!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்று வந்த சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி கோலாகலமாக நிறைவு பெற்றது. பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 31வது சர்வதேச விளையாட்டு போட்டி சீனாவில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. கொரோனா பேரிடர் காரணமாக 2 ஆண்டுகள் தாமதமாக நடைபெற்ற விளையாட்டு போட்டியில், 113 நாடுகளில் இருந்து சுமார் 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். சுவிட்சுவான் மாகாணத்தின் செங்குடுவில் நடைபெற்ற நிறைவு விழா ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த போட்டியில் இந்தியா 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 26 பதக்கங்களை வென்றுள்ளது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்