சிலியில் தொடரும் மரண ஓலம்! காட்டுத்தீயில் கருகிய 112 பேர்.. ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசம்

டெல்மார்: சிலி நாட்டில் பயங்கர காட்டு தீயில்பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான சிலியில் மோசமான வானிலை காரணமாக பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. வினா டெல்மார், நவிடாப், எஸ்ட்ரெல்லா, வால்பரைசோ உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டு தீ குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 200 க்கும் அதிகமாக இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் வனப் பகுதிகள் தீயில் கருகி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த காட்டு தீயில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி விட்டன.

தீ விபத்தில் சிக்கி இதுவரை 112 பேர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறி உள்ளனர். அதிக வெப்பநிலை, பலத்த காற்று, குறைந்த ஈரப்பதம் காரணமாக தீயை அணைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்க தீயணைப்பு மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வெப்பநிலை 104 டிகிரி வரை உள்ளதால் வரும் நாட்களில் காட்டுத்தீ இன்னும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சிலியில் அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.

Related posts

ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்க; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்களை இழுக்க பேச்சு: ஆந்திராவில் `ஆபரேஷன் தாமரை’

ரேபரேலியை ராகுல் தக்கவைத்து கொண்டால் வயநாட்டில் பிரியங்கா போட்டி?.. கேரள காங்கிரஸ் விருப்பம்

ஒருபுறம் மோடி பதவியேற்பு விழா..! மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு என தகவல்