இயக்குநர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: இயக்குநர் சங்கரின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2-வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சென்னையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநர் சங்கர் அவர்களின் மகள் ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்” என தெரிவித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்

ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

வரலாற்றுப் புகழ்பெற்ற ரஞ்சன்குடி கோட்டை சுவர்களில் முளைத்துள்ள செடிகள்: வேரோடு அகற்ற மக்கள் கோரிக்கை