முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். சென்னை, கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்வதாக இருந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்