முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு: இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும், சங்கங்களும் சந்தித்து தேர்தலில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதுபோல, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கின்றனர்.

இதேபோல ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர் கழகம், புதிய திராவிடர் கழகம் சார்பில் அதன் நிறுவன தலைவரும், தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினருமான ராஜ் கவுண்டர் மற்றும் நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத் தலைவர் பரிமளம் மற்றும் நிர்வாகிகள், தென்னிந்திய விஸ்வ-கர்மா முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவணன்; தமிழக வீரசேவை முன்னேற்ற பேரவை, தலைவர் தங்க தமிழ்செல்வன்; தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்கேடி பேரவை மாநில தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ்.ஆர்.எம். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் சமூக நீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் நேரில் சந்தித்து தேர்தலி6ல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், வெற்றிபெற தங்கள் நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

மேலும், பூலித்தேவன் மக்கள் கழக தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்தார். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில்16 அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படி சமூக நீதிப் பேரவை உள்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முதல்வரை சந்தித்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related posts

10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு

ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!

தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை!