அதுக்குள்ள சட்டமன்ற தேர்தலுக்கு போயிட்டாங்க தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் அன்புமணியா – அண்ணாமலையா? கொடுங்கையூர் நிகழ்ச்சியில் பாமக-பாஜ காரசார விவாதம்

சென்னை: பாஜ சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு வழக்கறிஞர் பால் கனகராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை கொடுங்கையூர் பகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து பேசினர்.

அப்போது பாமகவைச் சேர்ந்த நிர்வாகி ராஜாராம் பேசும்போது, 2026ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும். அன்புமணி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பால் கனகராஜ் பேசுகையில், நமது கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர வேண்டும்.

2026ல் பாஜ ஆட்சி அமைந்து அண்ணாமலை முதல்வராக வேண்டும். மறைமுகமாக நமக்கு உதவி செய்ய ஏராளமான நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்’ என்றார். பாஜ அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜவும், பாமகவும் மாறி மாறி பேசிய இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி