முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கிறித்துவ பெருமக்கள், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் சந்திப்பு!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கிறித்துவ பெருமக்கள், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிறித்துவ பெருமக்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, கிறித்துவ நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிமுறைகள், உறுப்பினர்கள் பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த வழிமுறைகளும், படிவங்களும் அரசாணை மூலம் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.

இந்நலவாரியத்திற்கு புதியதாக நியமனம் செய்யப்பட்ட தலைவர் திருமதி. விஜிலா சத்யானந்த், துணைத் தலைவர் போதகர் ஆர்.தயாநிதி மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ரோஸ்லின் ஜீவா, ஜெ. ஜான் பிரகாஷ் எபினேசன், எம்.சத்திய பால்ராஜ், ஏ. ஜோசப் ஸ்டாலின், எம். நிக்சன், மறைதிரு எஸ். சாமுவேல் புனிதராஜ், பி. பிரபாகர், பிரேம்குமார் ராஜாசிங், மறைதிரு வி. பிரேம் கிறிஸ்துதாஸ், பி. சாமுவேல் கிருபாகரன், பிஷப் டாக்டர் பி.மோகன்தாஸ், போதகர் டி.சோபித்தராஜ், மறைதிரு சி. ஜெபநேசர் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில் இன்று (7.3.2024) சந்தித்து, நன்றி தெரிவித்து, வாழ்த்துப் பெற்றார்கள்.

Related posts

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை