நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல்குளத்தில் 26ம் தேதி மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு வருத்தமடைந்தேன். சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன். சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்