இந்தியாவிலேயே அனைவரும் விரும்பி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தியாவிலேயே அனைவரும் விரும்பி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்; சாதி கலவரங்கள், மதக் கலவரங்கள் போன்ற வழக்கமான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அனைவரும் விரும்பி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட சட்டம், ஒழுங்கு திமுக ஆட்சியில் நிலைநாட்டப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் ரவுடி வேட்டை நடத்தப்பட்டு 6,132 பேர் கைது செய்யப்பட்டு 3,047 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020-ல் 1.68 லட்சமாக இருந்த மதுவிலக்கு வழக்குகள் தற்போது 1.55 லட்சமாக குறைந்துள்ளன. 2019-ல் 1,678-ஆக இருந்த கொள்ளை சம்பவ வழக்குகள் தற்போது 1,597-ஆக குறைந்துள்ளன. பெண்கள், சிறுமி கடத்தல் வழக்குகள் 2018-ல் 907-ஆக இருந்த நிலையில் தற்போது 535-ஆக குறைந்துள்ளன என கூறினார்.

தொடர்ந்து வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர்; வேங்கைவயலில் தீண்டாமை அகற்றப்பட்டுள்ளது; அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர்தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் இவ்வாறு கூறினார்.

Related posts

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி

நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு