முதல்வர் டிவிட் தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன்

சென்னை: ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, ‘தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள். கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலை சிறந்த சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்