முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் வழக்கு

சென்னை: முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் வழக்கை தாக்கல் செய்தார். திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக சென்னை கோர்ட்டில் முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை கடந்த மாதம் 14ம் தேதி முதல் வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்ததாக திமுக சார்பில் பதிலளிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்று திமுக எச்சரித்திருந்தது. ஆனால் 15 நாட்களுக்குப் பின்னரும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கை அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்வர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் முதல்வர் மீது வைத்திருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக குற்றசாட்டு வைத்துள்ளனர். அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பொய், முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அண்ணாமலை மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் நடவ டிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இந்த மனு சென்னை விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 8 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related posts

மே-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்