சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனடியாரை தாக்கிய தீட்சிதர் கைது செய்ய கோரி போஸ்டர்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற சிவனடியாரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக்கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அண்ணாமலை நகர் அடுத்துள்ள சிவபுரியை சேர்ந்த சிவனடியார் கார்‍வண்ணன் கடந்த 21ம் தேதி சென்றார். அப்போது கோயிலின் 21 படிக்கட்டு அருகே சென்றபோது கோயில் தீட்சிதர்களுக்கும், கார் வண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் தீட்சிதர்கள் சிலர் கார்வண்ணனை நெட்டி தள்ளி தாக்கியுள்ளனர். தீட்சிதர் ஒருவர் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கார்வண்ணன் புகார் செய்து இருந்தார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று சிதம்பரம் பேருந்து நிலையம் மற்றும் நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் சிவபுரி பகுதியை சேர்ந்த சிவனடியார் கார்‍வண்ணன், சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தாக்கியதை கண்டித்தும், தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு நேற்று காலை கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு