சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக அலகாபாத், தெலங்கானா நீதிபதிகள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு

சென்னை: அலகாபாத் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இருவரும் விரைவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9 ஆக குறைகிறது.1968ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பிறந்த விவேக் குமார் சிங் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 1969ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிறந்த மம்மினேனி சுதீர் குமார் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கானா உயர் நீதிமன்

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து