சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் 5 ரயில்களில் கூடுதலாக தூங்கும் வசதி பெட்டிகள் சேர்ப்பு!

சென்னை: பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் – குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்; சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு ஆக.25, 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலில் (16127) கூடுதலாக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்- சென்னை எழும்பூருக்கு ஆக. 27-ம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16866) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெங்களூரு – கொச்சுவேலி ஹம்சபர் விரைவு ரயில் (16319), கன்னியாகுமரி – புனேக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16382) உட்பட 3 விரைவு ரயில்களில் தலா ஒரு தூங்கும் இரண்டாம் வகுப்புபெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்