சென்னையில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை..!!

சென்னை: சென்னையில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி, 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஜன.9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், போக்குவரத்து ஊழியர்களுடன் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் சென்னையில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துக் கழக பணியாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்ட அறிவிப்பை கைவிட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Related posts

மிசோரமில் ரூ.9.7 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது

அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்

படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்