சென்னையில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கடற்கரை செல்ல இரவு 10 மணி வரை அனுமதி: கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி

சென்னை: தென்சென்னை சட்டம் – ஒழுங்கு காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அளித்த பேட்டி: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உட்பட முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் அதிகமானோர் வரக்கூடும். மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பொதுமக்கள் கடற்கரைக்கு அதிகம் வரக்கூடும் என்பதால் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென தனி கட்டுப்பாட்டு அறை, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், காணும் பொங்கலையொட்டி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் கடற்கரைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காசிமேடு உட்பட சென்னை காவல்துறையினரின் எல்லைவரையிலான அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்