சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் வந்தடைந்தார் பிரதமர் மோடி..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கல்பாக்கம் வந்தடைந்தார். இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் கல்பாக்கம் சென்றடைந்தார். கல்பாக்கத்தில் அணுஉலை ரியாக்டர் திட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். நாட்டின் முதலாவது 500 மெகாவாட் ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி, மாலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . காவல் ஆணையர் உத்தரவுப்படி பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ஈனுலை திட்டத்தால் ஆபத்து வரும் என கூறுவது ஏற்புடையதல்ல என்று ஓய்வு பெற்ற விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாயு வெளியேறாமல் இருக்க உயர் பாதுகாப்பு அவசியம். திரவ சோடியம் கழிவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கதிரியக்கம் உள்ளது. அதிவேக ஈனுலை திட்டம் என்பது ஆராய்ச்சியின் முக்கிய பங்கு. திட்டத்தின் பயன்கள் போக போகதான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு