சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. கடந்த 12ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,790க்கும் சவரன் ரூ.54,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து 89 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர வைத்து கொண்டுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு