ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு!!

சென்னை : ஆவின் பால் பொருட்களின் விலை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ பன்னீர் ரூ. 450 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550 ஆக உயர்ந்துள்ளது. 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை கிலோ பன்னீர் 300 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 200 கிராம் பன்னீர் 120 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. 200 பாதாம் மிக்ஸ் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.20 உயர்ந்து ரூ.120க்கு விற்பனை ஆக உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Related posts

சில்லி பாயின்ட்…

நமீபியாவுக்கு எதிராக ‘பவர் பிளே’ வெற்றி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா

தீப்பிடித்து எரிந்த சாலை: ஆந்திராவில் பரபரப்பு