சென்னையில் சினிமா தீம் கெட்டப்பில் நடைபெற்ற கார் பேரணி: சினிமா நடிகர்கள் கதாபாத்திர வேடங்கள் அணிந்து பங்கேற்பு

சென்னை: சினிமா தீம் கெட்டப்பில் இந்தியன் ஆயில் சார்பில் சென்னையில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் கலந்து கொண்ட 23-ம் ஆண்டு கார் பேரணி நடைபெற்றது. சினிமா தீம் அடிப்படையிலான கார் பேரணியை இந்தியன் ஆயில் கார்பரேசன், காவிரி மருத்துவமனை இணைந்து சவேரா ஓட்டலில் நடத்தின. 100-க்கும் மேற்பட்ட கார்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில் சினிமா பிரபலங்களை பிரதிபலிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். வேடம், கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரக்கூடிய சொப்பன சுந்தரி நகைச்சுவை கதாபாத்திரங்கள், பாகுபலி திரைப்படத்தின் கதாபாத்திர வேடங்கள் அணிந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இது ஒரு Get together போன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த பேரணியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் அருணா குப்தா என்பவர் தெரிவித்தார். வார விடுமுறை தினத்தில் செல்ல பிராணிகளுடன் குழந்தைகளையும் அழைத்து வந்து ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியாக இந்த கார் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related posts

குளித்தலை அருகே மதுபோதையில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,328க்கு விற்பனை..!!

இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு..!!