சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரூ.100-க்கும் கீழ் குறைந்த தக்காளி விலை… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

சென்னை : சென்னை கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை 100க்கு கீழ் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வருகின்றன. குறிப்பாக தக்காளியின் விலை உச்சம் தொட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் அவ்வப்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து மக்களை அச்சுறுத்தியது.

கனமழை பெய்து தக்காளி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு காய்கறி சந்தையில் அதிகபட்சமாக 180 ரூபாய் வரை விற்றது. அதுவே சில்லறை விற்பனை கடைகளில் ரூ.200-க்கு மேல் விற்பனையானது. இதனால் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் பசுமை கடைகளில் முதல் கட்டமாக தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.120க்கும், 2ம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரூ.100-க்கும் கீழே குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரத்து அதிகரிப்பால் வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

உள்ளாடைகளை கழற்றி சிறுமியை நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி அல்ல: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மோடியின் 400 கோஷம் பின்னடைவுக்கு காரணம்: ஏக்நாத் ஷிண்டே கருத்து

நீட் தொடர்பாக 63 வழக்குகள் கேள்வித்தாள் வெளியானதாக எந்த ஒரு வழக்கும் இல்லை: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு