சென்னை கே.கே.நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: சென்னை கே.கே.நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பல மாதங்களாகவே தொடர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் வருமான வரித்துறை சோதனை சென்னை யானைக்கவுனி, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை யானைகவுனியில் லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவது சம்மந்தப்பட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால் வீடு, அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 3 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார்

சைனீஸ் முதல் பர்மீஸ் வரை… பட்ஜெட் விலையில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்!

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!