சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம் ஜூலை 24-ம் தேதி தொடங்க உள்ளது -மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம் ஜூலை 24-ம் தேதி தொடங்க உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்ததன்படி குடும்ப தலைவிகள் மற்றும் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது செப்டம்பர் 15ம் தேதி முதல் திட்டம் தொடங்கிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விதிமுறைகளுடன் கூடிய விண்ணப்பங்களும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய நியாயவிலை கடைகள் மூலமாக தன்னார்வலர்களின் உதவியோடு பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்தும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறுவதும் அதில் தகுதியுடைய பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூலை 24-ம் தேதி 3,200 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

மேலும் குறிப்பாக 1,415 நியாயவிலை கடைகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு நியாயவிலை கடைகளுக்கும் 500 அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்களை நியமனம் செய்து மக்களுக்கு வழிகாட்டும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் இருக்கக்கூடிய 11,000 லட்சத்துக்கு மேற்பட்ட அட்டைதாரர்களில் இருந்து பரிசீலனை செய்து அதற்கு தகுதியுடைய பெண்களுக்கு உரிமை தொகை வழங்கக்கூடிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!