செங்கல்பட்டு குறைதீர் கூட்டத்தில் 385 மனுக்கள் பெறப்பட்டன

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 385 மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு 385 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், தென்னிந்திய அளவில் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வின், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்