செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனி ஓய்வறை வசதி: அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உத்திரமேரூர், கல்பாக்கம், மதுராந்தகம், வந்தவாசி, மேல்மருவத்தூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், இங்கு பிணவறையில் பிரேத பரிசோதனை முடிந்து எடுத்து செல்லப்படும் சடலங்களை ஏற்றி செல்வதற்கு 24 மணி நேர இலவச அமரர் ஊர்தி சேவையும் இயங்கி வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் சுழற்சி முறையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு இம்மருத்துவமனையில் தனியே ஓய்வறை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை.

இதனால் இவர்கள் மரத்தடி மற்றும் வெட்டவெளிகளில் பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகளிடையே தங்கி ஓய்வெடுக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. மேலும், இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் தங்கி ஓய்வெடுக்கும் மரத்தடிகளை சுற்றிலும் மருத்துவ கழிவுநீர் திறந்துவிடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் ஊர்தி ஓட்டுநர்களும் உதவியாளர்களும் பல்வேறு நோய்தொற்றுகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனியே ஓய்வறை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை டீன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்