செங்கல்பட்டில் ஊர்க்காவல்படை காவலர்கள் தேர்வு: 70 பேர் தேர்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஊர்க்காவல்படைக்கான காவலர்கள் தேர்வு நேற்று நடைப்பெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊர்க்காவல்படை பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய, மாவட்ட காவல் துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஆண்கள் 125 பேர், பெண்கள் 25பேர் என, மொத்தம் 150 பேர் ஆர்வத்துடன் விண்ணப்பத்திருந்தனர். அதற்கான தேர்வு நேற்று செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இதற்கு தலைமை தாங்கினார்.

டிஎஸ்பி பாரத் முன்னிலை வகித்தார். இந்த தேர்வில் பங்கேற்றவர்களுக்கு எடை, உயரம் மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இறுதியாக 60ஆண்களும், 10 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமார், மற்றும் ஊர்க்காவல்படை மண்டல தளபதி கணேஷ், உதவி மண்டல தளபதி மன்சூர், தலைமை காவலர் சங்கீதா, படைத்தளபதி கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு