மக்களவை தேர்தலால் கியூட் யூஜி நுழைவு தேர்வு தேதியில் மாற்றமா?

புதுடெல்லி: நாடு முழுவதுமுள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான இளநிலை கியூட் யுஜி நுழைவுத் தேர்வு மே 15ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவை தேரதல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களி்டம் பேசிய பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார், “மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 29 – ஜூன் 1 வரையிலான காலகட்டத்தில் மே 20, 25 தேதிகளில் மட்டுமே தேர்தல் நாளில் தேர்வுகள் ஒத்து போகின்றன.

மார்ச் 26ம் தேதிக்கு பிறகு எந்தெந்த இடங்களில் எத்தனை மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். இந்த தரவுகள் மற்றும் தேர்தல் தேதி அடிப்படையில் கியூட் யுஜி தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிக்கும். ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் இருக்காது” என்று கூறினார்.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது