புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்

புழல்: புழல் தண்டனை சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் பல கைதிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் செல்போன்களை பதுக்கி வைத்திருப்பதாக சிறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை காவலர்கள் ஒவ்வொரு அறையாக சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையின் ஜன்னல் மேலே துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொருளை பிரித்து பார்த்தபோது, அதில் ஒரு செல்போன், சிம் கார்டு சார்ஜர், பேட்டரி இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு