அறங்காவலர் விதிகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷித் அமைப்பை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘மத நிறுவனங்களின் சொத்துகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959ன் படி கட்டுமானம், புதுப்பித்தல், மறுசீரமைப்பு, பாதுகாப்பு, பழுதுபார்ப்பு போன்ற குடிமராமத்து பணிகளை எந்த விதத்திலும் மேற்கொள்வதைத் தடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன்,‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் அனைத்தும் சட்ட விதிகளின் படி தான் நடத்தப்படுகிறது.

மேலும் அறங்காவலத்துறையை பொருத்தமட்டில் அதனை தீவிரமாக கண்கானித்து எந்தவித குறைபாடுகளும் இல்லா அளவிற்கு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் குற்றச்சாட்டு என்பது உண்மைக்கு புறம்பானதாகும். மேலும் அறங்காவலர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு கொள்கை ரீதியாக ஒரு நடவடிக்கை எடுக்கும் போது அதனை தனிப்பட்ட முறையில் இருக்கும் நபர் எவ்வாறு தடை விதிக்க கோர முடியும் என தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். அதேப்போன்று அறங்காவலர் நியமன நடைமுறையை உறுதிப்படுத்தியும் உத்தரவிட்டு, அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

 

Related posts

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; கோவிலாறு அணையை தூர்வார வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை