பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாசை வீழ்த்தி அரையிறுதிக்கு கார்லோஸ் அல்காரஸ் தகுதி

பாரீஸ்: கிராண் ட்ஸ்லாம் தொடர் களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன்டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி போட்டியில், நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் 20 வயதான கார்லோஸ் அல்காரஸ், 5ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் 24 வயது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதினர். விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு கால் இறுதியில் 3ம் நிலை வீரரான செர்பியாவின் 36 வயதான நோவக் ஜோகோவிச், 4-6, 7-6, 6-2, 6-4 எஎன்ற செட் கணக்கில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை வீழ்த்தினார். அரையிறுதியில் அல்காரசுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார். இன்று நடைபெறும் கால் இறுதி போட்டிகளில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-அர்ஜென்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரி, 6ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், 4ம் நிலை வீரரான காஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்