கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் பரிதாப பலி: 5 பேர் படுகாயம்

கடலூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகாவை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி ரேகா (36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும் இவரது தோழி தஞ்சாவூரை சேர்ந்த மூமன் சங்கீத் மனைவி டெல்பின் தெரசா (22) அவரது இரண்டரை வயது மகள் மற்றும் ரேகாவின் அக்கா இந்துமதி (36) இவரது மகள் மகாலட்சுமி (14) ரேகாவின் மகள்கள் நந்தனா (13) மிருதுளா (8) ஆகியோர் ஒரு காரில் புதுச்சேரி சுற்றுலா செல்வதற்காக நேற்று புறப்பட்டனர்.

காரை புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (40) ஓட்டி வந்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி (36) மற்றும் நந்தனா (13) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 6 பேரில் ஓட்டுநர் பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்