மரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சீராம்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ்(26). திருவிழாக்களில் பேண்ட் செட் குழுவில் வாத்திய கலைஞராக வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களாக சீராம்பாளையம் மாரியம்மன் பண்டிகை நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள லோகேஷ் வீட்டுக்கு ஆலாம்பாளையத்தை சேர்ந்த தனசேகர்(29), கிழக்கு தொட்டி பாளையம் ஸ்ரீதர்(17), ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கவின் (22), காஞ்சிக்கோயில் தோப்புக்காட்டை சேர்ந்த சிவக்குமார்(23) ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள், 5 பேரும் நேற்று மாலை 5 மணியளவில் தனசேகரின் காரில் குமாரபாளையம் சென்றுவிட்டு சீராம்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தனசேகர் ஓட்டி வந்தார். வேகமாக வந்த கார் நிலை தடுமாறி குப்பாண்டபாளையம் பஸ் ஸ்டாப் முன்பு சாலையோரமிருந்த பனை மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஸ்ரீதர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!