கனடா ஓபன் டென்னிஸ் கமீலாவை வீழ்த்திய பெட்ரா: முன்னணி வீரர்கள் தோல்வி

மானட்ரீல்: கனடாவின் மானட்ரீல் நகரில் நேஷனல் பேங்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிதோவா(9வது ரேங்க்), இத்தாலி வீராங்கனை கமீலா ஜியோர்ஜி(51வது ரேங்க்) ஆகியோர் மோதினர். சுமார் 2மணி நேரத்திற்கு மேல் நீண்ட ஆட்டத்தில் பெட்ரா 6-2, 5-7, 6-0 என்ற செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார்.

அதேபோல் 3 ஆண்டுக்கு பிறகு களம் கண்ட முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையும், 2 குழந்தைகளுக்கு தாயுமான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2வது சுற்றில் 2-6, 5-7 என நேர் செட்களில் விம்பிள்டன் சாம்பியன் செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவாவிடம் தோற்று வெளியேறினர். கனடாவின் டொரோன்டோ நகரில் நேஷனல் பேங்க் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் 2வது சுற்றில் களமிறங்கிய முன்னணி வீரர்கள் தங்களை விட தரவரிசையில் பின்தங்கிய வீரர்களிடம் தோல்வியை சந்தித்தனர்.

சிட்சிபாஸ்(4வது ரேங்க், கிரீஸ்) 0-2 என்ற நேர் செட்களில் மோன்ஃபில்சிடமும்(276வது ரேங்க், பிரான்ஸ்), ஹோல்கர் ரூனே(6வது ரேங்க், டென்மார்க்) 1-2 என்ற செட்களில் மார்கோஸ் கிரோனிடமும்(70வது ரேங்க், அமெரிக்கா), அலெக்சாண்டர் ஸ்வெரவ்(16வது ரேங்க், ஜெர்மனி) 0-2 என நேர் செட்களில் அலெசாண்ட்ரோ ஃபோகினோவிடம்(37வது ரேங்க், ஸ்பெயின்), ஆந்த்ரே ரூபலேவ்(7வது ரேங்க், ரஷ்யா) 0-2 என நேர் செட்களில் மேகென்சி மெக்டொனால்டுவிடமும்(59வது ரேங்க், அமெரிக்கா) மண்ணை கவ்வினர்.

Related posts

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் : துரை வைகோ

வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்