கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்

*கூண்டு இடமாற்றம்

மேட்டுப்பாளையம் : மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, கோடைகாலம் துவங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயில் வாட்டி வருகிறது.இதனால், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி ஊருக்குள் வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் உள்ள வெள்ளிப்பாளையம் சென்னாமலை கரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஒன்றை மர்ம விலங்கு அடித்து கொன்று விட்டதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை வைத்து மர்ம விலங்கு குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்.28ம் தேதி அந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தனர்.

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் இத்தனை நாட்களாக சிறுத்தை போக்கு காட்டி வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் அறிவொளி நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, நேற்று வனத்துறையினர் அறிவொளி நகரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கோவிந்தசாமி என்பவரது தோட்டத்தில் கூண்டை இடமாற்றம் செய்து வைத்தனர்.

Related posts

டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!

பைசாபாத் தொகுதி வெற்றியே இந்தியா சொல்லும் செய்தி: சு.வெங்கடேசன் எம்.பி