திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களுக்கு நாளை முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை

சென்னை: தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அனைத்தும். 30.01.2024 முதல் சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்பட உள்ளது.

திருச்சி, சேலம், விருத்தாசலம் வழித்தடங்களுக்கு கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி முதல் இரவு 10 வரை அதிகப்படியான பேருந்துகளும் அதன்பிறகு பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி வழியாக 118 பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து திருச்சி வழியாக 18 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

மேற்கண்ட பேருந்து இயக்க மாற்றத்தினால் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி செல்லும்போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடைந்து, பின் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மேற்குறிப்பட்ட பேருந்துகள் இயக்கத்திற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தினை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது