கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் சண்டை; கர்ப்பிணி காதலியை சுட்டுக் கொன்ற காதலன்: அமெரிக்காவில் வெறிச்செயல்

நியூயார்க்: கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் தனது கர்ப்பிணி காதலியை காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவின் டெக்சாசில் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஹெரால்ட் தாம்சன் (22) என்பவர், கேப்ரியெல்லா கோன்சாலஸ் (26) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ெநருக்கமாக வாழ்ந்து வந்தனர். இதனால் கர்ப்பிணியான கேப்ரியெல்லா கோன்சாலஸ், தனது கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று காதலனிடம் கேட்டார். அதற்கு காதலன் ஹெரால்ட் தாம்சன் சம்மதிக்கவில்லை. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் ஹெரால்ட் தாம்சனை அழைத்து விசாரித்தனர். அவர்களை ஹெரால்ட் தாம்சன் தாக்கினார்.

இந்த நிலையில் காதல் ஜோடி, ெடக்சாஸ் ஸ்ட்ரிப் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் பேசிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து அந்தப் பெண் ஓட்டம் பிடித்தார். அவரை பின் தொடர்ந்து ஓடிய காதலன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கர்ப்பிணி காதலி கேப்ரியெல்லா கோன்சாலஸை சுட்டுக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஹெரால்ட் தாம்சனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது காதலியின் கருக்கலைப்பு கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால் அவரை சுட்டுக் கொன்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி

காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது; 2 மணி நேரத்தில் மீட்பு, ஒருவர் கைது