தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்தாண்டுக்கான கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்கா,சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாத்திகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.மேலும் மலர் கண்காட்சி அலங்கார பணிகளுக்காகவும், மேடைகளில் அலங்கரிப்பதற்காகவும் சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.தற்போது வெயிலான காலநிலை நிலவி வரும் நிலையில் ெதாட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகின்றன.

இப்பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யும் வகையில் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.