உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடக்கம்..!!

உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முக்கிய நிகழ்வாக 10.15 மணியளவில் 125 மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா மற்றும் நீலகிரி ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர் சிற்பங்களையும், மலர் அலங்காரங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த மலர் கண்காட்சியை பொறுத்தவரையில் சிறப்பு அம்சமாக 85,000 கார்னேசன் மலர் கொண்டு 46 அடி அகலம், 22 அடி உயரம் கொண்ட மயில் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட மலர் அலங்காரங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது. மலர் நாடங்களிலும் 35ஆயிரம் மலர் செடிகள், லட்சக்கணக்கான மலர்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 125 வது மலர் கண்காட்சியை குறிப்பிடும் வகையில் மலர் அலங்காரம் ஒன்றும் 175 ஆண்டுகள் சிறப்பு புகழ் மிக்க தாவரவியல் பூங்காவை குறிப்பிடும் வகையாக ஒரு மலர் அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சின்னங்களாக கருதப்படும் நீலகிரி வரையாடு, மரகத பூ, மரகத புறா, செங்காழ்ந்தல் மலர் போன்ற பல்வேறு மலர் சிற்பங்களும் அங்கங்கே கட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல வளர்ந்து வரும் வனவிலங்குகள், செல்பி மேடை, மஞ்சள் பை என இருபதுக்கும் மேற்பட்ட உருவங்கள் சுமார் 2 லட்சம் மலர்களை கொண்டு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியானது 5 நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக வந்துள்ளனர். மலர் கண்காட்சியின் பாதுகாப்பை பொறுத்தவையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை