திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த 2 வாலிபர்களின் சடலங்களை மீட்டு, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே ரயில்வே தண்டவாளம் அருகில், 2 வாலிபர்களின் சடலங்கள் கிடப்பதாக, அக்கம் பக்கத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், 2 வாலிபர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபர்களிடம் பீகார் மாநிலத்தில் இருந்து சென்னை வந்ததற்கான ரயில் டிக்கெட் மட்டும் இருந்தது எனவும், அவர்களின் பெயர் தெரியவில்லை. பீகாரை சேர்ந்தவர்கள் கும்மிடிப்பூண்டியில் அதிகளவில் பணிபுரிவதால், அங்கு செல்வதற்காக மின்சார ரயிலில் பயணிக்கும்போது, தவறி கீழே விழுந்து அடிப்பட்டு இறந்தார்களா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்