விசைப்படகில் மீன்பிடிக்க சென்றபோது ஆழ்கடலில் மீனவர் மாயம்

தண்டையார்பேட்டை: விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது ஆழ்கடலில் மாயமான மீனவரை தேடும் பணியில் காசிமேடு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காசிமேடு சிங்காரவேலன் நகர் பள்ளப்பகுதியைச் சேர்ந்தவர் நீலவேணி (58). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அதில் ஒரு மகனான சரண்குமார் (28) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மீனவரான மோகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் குரு தலைமையில் வினோத் குமார், அஜித்குமார், அருண், சுரேஷ், பிரபு, முருகன், மோகன்ராஜ், சரவணன், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட மீனவர்கள் சரண்குமாருடன் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதில் சரண்குமார் மட்டும் காணவில்லை எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சரண்குமார் குடிபோதையில் இருந்தார். அப்போது அவர் படகின் பின்புற பகுதிக்குச் சென்றுள்ளார். காலையில் டீ கொடுப்பதற்காக சென்றபோது சரண்குமார் விசைப்படகில் இருந்து மாயமானது எங்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நாங்கள் கடலில் சரண்குமாரை தேடிப் பார்த்தோம். ஆனால் அவர் கிடைக்காததால் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு வயர்லெஸ் மூலம் ஓட்டுனர் தகவல் தெரிவித்தார் என்றனர். இதனையடுத்து கடலில் இருந்து மீனவர்கள் கரைக்கு திரும்பினர். பின்னர் காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையம் மற்றும் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சரண்குமாரின் தாய் நீலவேணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சரண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு